விளையாட்டு

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் அர்ஜுன்

செய்திப்பிரிவு

சாங்வான்: தென்கொரியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா தங்கப் பதக்கம் வென்றார்.

தென் கொரியாவின் சாங்வான் நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் இளம் வீரரான அர்ஜுன் பாபுதா, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற அமெரிக்காவின் லூகாஸ் கோசெனிஸ்கியை எதிர்த்து விளையாடினார்.

இதில் அர்ஜுன் பாபுதா 17-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். சீனியர் பிரிவில் அர்ஜுன் பாபுதா வெல்லும் முதல் தங்கம் இதுவாகும்.

தகுதி சுற்றில் அசத்தல்

கடந்த 2016-ம் ஆண்டு அஜர்பைஜானில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையிலும் அர்ஜுன் பாபுதா தங்கம் வென்றிருந்தார். பஞ்சாப்பை சேர்ந்த 23 வயதான அர்ஜுன், தகுதி சுற்றில் 261.1 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்திருந்தார்.

SCROLL FOR NEXT