அகில இந்திய கூடைப்பந்து போட்டி தூத்துக்குடியில் ஜூன் 3-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.
இதுபற்றி தூத்துக்குடி இளை யோர் கூடைப்பந்து கழகத் தலைவர் சுஜேஷ் ராஜா நிருபர் களிடம் கூறியதாவது: இளையோர் கூடைப்பந்து கழகம், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் இணைந்து நடத்தும் அகில இந்திய அளவிலான 2-வது மின்னொளி கூடைப்பந்தாட்ட போட்டி ஜூன் 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை தூத்துக்குடியில் நடக்கிறது. தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை மாநகர காவல் உதவி கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் தொடங்கி வைக்கிறார்.
ஆண்கள் பிரிவில் சென்னை ஐஓபி, மும்பை மேற்கு ரயில்வே, கேரள மின்வாரியம் உள்ளிட்ட 8 அணிகளும், பெண்கள் பிரிவில் சென்னை தெற்கு ரயில்வே, தெலங் கானா தெற்கு மத்திய ரயில்வே, கேரள மின்வாரியம் உள்ளிட்ட 6 அணிகளும் பங்கேற்கின்றன.
இரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் ஸ்டெர்லைட் கோப்பை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.