விளையாட்டு

மாநில ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப்: பள்ளி மாணவன் அவினாஷுக்கு 4 பதக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சார்பில் 48-வது மாநில ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் கடந்த 28 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் 400 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் சென்னை ஆதம்பாக்கம் டிஏவி மெட்ரிக் பள்ளி மாணவன் எஸ்.அவினாஷ் தங்கப் பதக்கம் வென்றார்.

மேலும் 100 மீட்டர் பட்டர் பிளை பிரிவிலும் அவினாஷ் தங்கம் வென்று அசத்தினார். இந்தத் தொடரில் 200 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் வெள்ளிப் பதக்கமும், 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அவினாஷ்.

SCROLL FOR NEXT