புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடவுள்ளது. அதற்கு முன்னதாக பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி லீசெஸ்டர்ஷையருக்கு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் இது கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. இதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் அவர் விளையாடுவது சந்தேகம் என தெரியவந்துள்ளது.