7-வது ஆசிய இளைஞர் குத்துச் சண்டை போட்டி கஜகஸ்தானில் நடைபெற்றது. இதில் இந்தியா வுக்கு 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தது.
தேசிய சாம்பியனான அங் குஷ் தஹியா 60 கிலோ எடை பிரிவிலும், ஆஷிஸ் குல்கிர்யா 64 கிலோ எடை பிரிவிலும், ரியால் புரி 81 கிலோ எடை பிரிவிலும் வெள்ளி பதக்கம் கைப்பற்றினர். 91 கிலோவுக்கு அதிகமான எடை பிரிவில் மன்ஜித் சிங் வெண்கல பதக்கம் வென்றார்.
23 நாடுகளில் இருந்து 150 வீரர் கள் பங்கேற்ற இந்த போட்டியில் கஜகஸ்தான் 6 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலத்துடன் முதலிடத் தையும், உஸ்பெகிஸ்தான் 3 தங் கம், 3 வெள்ளி, 3 வெண்கலத் துடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தன. 3 வெள்ளி, 1 வெண்கல பதக்கத்துடன் இந்தியா 3வது இடத்தை பிடித்தது.