பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து ஷசாங்க் மனோகர் விலகியதையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 22-ம் தேதி பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு மும்பையில் கூடுகிறது.
பிசிசிஐ தலைவராக இருந்த ஷசாங்க் மனோகர் கடந்த 10-ம் தேதி பதவி விலகினார். இதைத் தொடர்ந்து ஐசிசி-யின் முதல் தன்னிச்சையான தலைவராக ஷசாங்க் மனோகர் மே 12 -ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இதனால் புதிய பிசிசிஐ தலைவரை தேர்ந்தெடுக்க வரும் 22-ம் தேதி பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு மும்பையில் கூடும் என கோவா கிரிக்கெட் சங்க பொதுச்செயலாளர் வினோத் பாத்கே தெரிவித்தார்.
இந்த பொதுக்குழுவில் புதிய தலைவரை தேர்வு செய்யும் பணி மட்டுமே நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
அநேகமாக அனுராக் தாகூர் புதிய தலைவராக தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க தலைவர் அஜெய் ஷிர்கே ஆகியோர் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.