விளையாட்டு

பீட்டர்சனுக்கு மீண்டும் சரிவு: சொல்லி வீழ்த்தினார் பொபாரா

ஆர்.முத்துக்குமார்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் மீண்டும் தன் திறமையை நிரூபிக்கப் பாடுபட்டு வரும் கெவின் பீட்டர்சனுக்கு நேற்று மீண்டும் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டது.

இங்கிலாந்து உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக அவர் நேற்று விளையாடினார். பலத்த கரகோஷங்களுகு இடையே களமிறங்கினார் பீட்டர்சன்.

ஆனால் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். எசெக்ஸ் அணியிடம் சர்ரே அணி தோல்வி தழுவியது. ஆனால் இதுவல்ல விஷயம்.

எசெக்ஸ் அணிக்கு விளையாடும் இங்கிலாந்து வீரர் ரவி பொபாரா இந்தப் போட்டிக்கு முன்பு தனது ட்விட்டரில் பீட்டர்சன் ஃபார்மை கேலி செய்யும் விதமாக வம்புக்கு இழுத்துத் தூண்டியுள்ளார்.

"நான் உங்களை அவுட் செய்ய வைத்து விடாதீர்கள்" ("Don't let me get you out") என்று பீட்டர்சனின் ஃபார்மை கேலி செய்யும் விதமாக பதிவிட்டிருந்தார்.

ஆனால் நடந்தது அதுதான்!! ரவி பொபாரா வீசிய பந்தை லாங் ஆன் திசையில் தூக்கி அடித்தார் பீட்டர்சன் அங்கு ரயான் டென் டஸ்சதே கையில் பந்து கேட்ச் ஆக முடிந்தது.

அதுவும் ஒரு அபாரமான கேட்ச். சர்ரே 20 ஓவர்களில் 151/6 என்று முடிந்தது. எசெக்ஸ் அணி சுலபமாக இலக்கைத் துரத்தி வெற்றி கண்டது. பீட்டர்சனை அபார கேட்சில் வீழ்த்திய டென் டஸ்சதே பேட்டிங்கிலும் 43 ரன்களை அடித்து வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சினார்.

SCROLL FOR NEXT