விளையாட்டு

2023 ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றது இந்திய கால்பந்து அணி

செய்திப்பிரிவு

கொல்கத்தா: 2023 ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. முதல்முறையாக அடுத்தடுத்த ஆசிய கோப்பை தொடர்களில் விளையாடுகிறது இந்தியா.

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் 2023 ஆசிய கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை வாக்கில் நடைபெற உள்ளது. மொத்தம் 24 அணிகள் இதில் பங்கேற்று விளையாட உள்ளன. இந்த தொடரில் பங்கேற்று விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 1964, 1984, 2011 மற்றும் 2019 தொடர்கள் இந்தியா விளையாடி உள்ளது. இதில், 1964-இல் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. மற்ற தொடர்களில் குரூப் சுற்றுடன் வெளியேறி உள்ளது.

இந்நிலையில், முதல் முறையாக அடுத்தடுத்த ஆசிய கோப்பை தொடர்களில் விளையாட தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. 2023 ஆசிய கோப்பைக்கான மூன்றாவது தகுதி சுற்றில் டி பிரிவில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்தியா தகுதி பெற்றுள்ளது. தகுதி சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது இந்தியா.

பிலிப்பைன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பாலஸ்தீனம் வெற்றி பெற்றதன் மூலம் ஆசிய கோப்பையில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT