ஐபிஎல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. கெய்ல் 6 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஆனால் விராட் கோலி-டி வில்லியர்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடியது. டி வில்லியர்ஸ் 43 பந்திலும், விராட் கோலி 53 பந்திலும் சதம் அடித்தனர். கோலி இந்த தொடரில் விளாசிய 3-வது சதமாக இது அமைந்தது.
டி வைன் பிராவோ வீசிய 18-வது ஓவரி லும், கவுசிக் வீசிய 19-வது ஓவரிலும் தலா 30 ரன்கள் விளாசப்பட்டன. விராட் கோலி 55 பந்தில், 8 சிக்ஸர்கள், 5 பவுண்டரி யுடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி வில்லியர்ஸ் 52 பந்தில், 12 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
249 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் அணி 18.4 ஓவரில் 104 ரன்க ளுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 37 ரன் எடுத்தார். ஸ்மித் 7, பிரண்டன் மெக்கலம் 11 ரன்களில் ஆட்ட மிழந்தனர். பெங்களூரு தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 4 விக்கெட் வீழ்த்தினார்.
144 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி 5-வது வெற்றி யை பதிவு செய்தது. இந்த வெற்றியால் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் நீடிக்கிறது. அந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் உள்ளன. குஜராத் அணிக்கு இது 5-வது தோல்வியாக அமைந்தது. 14 புள்ளிகளு டன் உள்ள அந்த அணி கடைசி இரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
பெங்களூரு அணி சேர்த்த 248 ரன்கள் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி குவிக்கும் இரண்டாவது அதிக பட்ச ரன் களாகும். இதற்கு முன்னர் 2013-ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக இதே பெங்க ளூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன் கள் குவித்து அதிகபட்ச ஸ்கோர் சேர்த்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மேலும் 2-வது விக்கெட்டுக்கு கோலி-டி வில்லியர்ஸ் ஜோடி 229 ரன்கள் குவித்தது. இதுவும் சாதனையே. இந்த ஜோடி கடந்த ஆண்டு மும்பை அணிக்கு எதிராக இதே விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்திருந்தன. இந்த சாதனையை அவர்களே முறியடித்துள்ளனர்.