விளையாட்டு

பிரக்ஞானந்தா, சந்தீபனுடன் செல்பி எடுத்த ஆனந்த்

செய்திப்பிரிவு

சென்னை: நார்வே செஸ் தொடரின் கிளாசிக்கல் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 9-வது சுற்றில் நார்வேயின் ஆர்யன்தாரியை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 22-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.

இதன் பின்னர் ‘சடன் டெத்’ முறையில் நடைபெற்ற ஆட்டத்தில் 87-வது நகர்த்தலின் போது ஆனந்த் வெற்றி பெற்றார். இந்தத் தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் 14.5 புள்ளிகள் பெற்று 3-ம் இடம் பெற்றார்.

குரூப் ஏ-ல் நடைபெற்ற ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா 9 சுற்றுகள் கொண்ட தொடரில் தோல்வியை சந்திக்காமல் 7.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தத் தொடரில் 6 சுற்றுகளில் வெற்றி கண்ட பிரக்ஞானந்தா, 3 சுற்றுகளை டிரா செய்திருந்தார்.

இந்நிலையில் இந்திய கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, சந்தீபன் சந்தா ஆகியோருடன் சமீபத்தில் இரவு உணவருந்திய முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுடன் எடுத்துக்கொண்ட செல்பியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதில், “அண்ணாவுடன் இரவு உணவில் செஸ் தம்பிகள்” என குறிப்பிட்டுள்ளார். இந்த படம் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT