சாட்டவுரோக்ஸ்: பிரான்ஸின் சாட்டவுரோக்ஸ் நகரில் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்தியாவின் அவனி லேகரா 250.6 புள்ளிகள் குவித்து உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதற்கு முன்னர் அவனி லேகரா 249.6 புள்ளிகள் குவித்து சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை அவரே தற்போது முறியடித்துள்ளார். போலந்தின் எமிலியா பாப்ஸ்கா 247.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், சுவீடனின் அனா நார்மன் 225.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். தற்போது உலகக் கோப்பையில் தங்கம் வென்றதன் மூலம் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார் அவனி லேகரா.