விளையாட்டு

இன்ஸ்டாகிராவில் 20 கோடி ஃபாலோயர்களை பெற்ற விராட் கோலி

செய்திப்பிரிவு

சென்னை: இன்ஸ்டாகிராமில் 20 கோடி ( 200 மில்லியன்) ஃபாலோயர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை பின்தொடர்ந்து வருகின்றனர். இதன் மூலம் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர் ஆகியுள்ளார் அவர்.

மெட்டா நிறுவனத்தின் போட்டோ மற்றும் வீடியோ ஷேரிங் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் தளத்தை பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வலையில் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். புகைப்படங்களை வாழ்வின் நினைவுகளை பகிரும் டைம்லைன் என்று சொல்லலாம். அந்தப் பணியை தான் செய்கிறது இன்ஸ்டா. பெரும்பாலான பிரபலங்கள் இன்ஸ்டாவில் ஆக்டிவாக செயல்படுவார்கள். அதனால் அவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

அப்படிப்பட்ட பிரபலங்களில் ஒருவர்தான் கோலி. வீடியோ, போட்டோ என சகலத்தையும் கோலி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்வார். சமயங்களில் அவர் பகிரும் பதிவுகளில் அவரது மனைவி அனுஷ்கா மற்றும் மகள் வாமிகாவும் இடம் பெற்றிருப்பார்கள். அதனால் அவரை பலர் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், அவர் 20 கோடி ஃபாலோயர்களை இந்த தளத்தில் எட்டியுள்ளார். விளையாட்டு துறையில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸியை தொடர்ந்து மூன்றாவதாக 200 மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார் கோலி. அது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு, நன்றியும் சொல்லியுள்ளார் கோலி.

இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை கொண்டுள்ளவர்கள்…

  • ரொனால்டோ - 451 மில்லியன் ஃபாலோயர்கள்
  • க்ய்லை ஜெனர் (Kylie Jenner) - 345 மில்லியன் ஃபாலோயர்கள்
  • மெஸ்ஸி - 334 மில்லியன் ஃபாலோயர்கள்
  • கோமஸ் - 325 மில்லியன் ஃபாலோயர்கள்
  • கிம் - 316 மில்லியன் ஃபாலோயர்கள்
  • அரியானா கிராண்டே - 315 மில்லியன் ஃபாலோயர்கள்
  • Beyonce - 261 மில்லியன் ஃபாலோயர்கள்
  • Khloé Kardashian - 249 மில்லியன் ஃபாலோயர்கள்
  • கெண்டல் ஜெனர் - 241 மில்லியன் ஃபாலோயர்கள்
  • ஜஸ்டின் பைபர் - 239 மில்லியன் ஃபாலோயர்கள்
  • டெய்லர் ஸ்விஃப்ட் - 213 மில்லியன் ஃபாலோயர்கள்
  • ஜெனிஃபர் லோபஸ் - 212 மில்லியன் ஃபாலோயர்கள்
  • விராட் கோலி - 200 மில்லியன் ஃபாலோயர்கள்
SCROLL FOR NEXT