விளையாட்டு

இந்திய ஒலிம்பிக் அணியின் நல்லெண்ண தூதராக சச்சின் நியமனம்

செய்திப்பிரிவு

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ணத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலில் நியமிக்கப்பட்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவை முன்னாள் தடகள வீரர் மில்கா சிங், மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் உள்ளிட்ட பலரும் எதிர்த்தனர். இந்நிலையில் மேலும் பலரை இந்திய அணியின் நல்லெண்ண தூதர்களாக நியமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் திட்டமிட்டது.

இந்திய அணியின் நல்லெண்ண தூதராக பொறுப்பேற்குமாறு முன் னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண் டுல்கர், துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அழைப்பு விடுத்தது.

இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அழைப்பை சச்சின் டெண்டுல்கர் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் இந்திய அணியின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க செயலாளர் ராஜீவ் மேத்தா இதை உறுதிப்படுத்தி யுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித் துள்ள சச்சின் டெண்டுல்கர், “நல்லெண்ண தூதர் என்ற முறை யில் இந்தியாவில் விளையாட்டை ஊக்குவிக்க தேவையான நடவடிக் கைகளை எடுப்பேன். விளையாட்டு வீரர்களின் நலனிலும் அக்கறை செலுத்துவேன்” என்றார்.

SCROLL FOR NEXT