விளையாட்டு

பிரேசில் செல்கிறார் விளாடிமிர் புதின்

செய்திப்பிரிவு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தைக் காண்பதற்காக அடுத்த மாதம் பிரேசில் செல்கிறார். உலகக் கோப்பை பரிசளிப்பு விழாவிலும் அவர் பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ரஷ்யா நடத்தவுள்ளது. பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பை பரிசளிப்பு விழாவின்போது, 2018 உலகக் கோப்பை நடத்துவதற்கான பொறுப்பை விளாடிமிர் புதினிடம் பிரேசில் அதிபர் தில்மா ரௌசப் வழங்குவார் என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இது தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.-பிடிஐ

SCROLL FOR NEXT