மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி யின் கால் இறுதிச் சுற்றுக்கு விக்டோ ரியா அஸரென்கா முன்னேறி யுள்ளார்.
மேட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி கள் மாட்ரிட் நகரில் நடைபெற்று வரு கின்றன. இதில் நேற்று நடந்த போட்டியில் பெலாரஸ் வீராங்கனை யான விக்டோரியா அஸரென்கா, பிரிட்டனின் லாரா ராப்சனை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் அஸரென்கா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்று கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதிப் போட்டியில் செக் நாட்டு வீராங்கனையான பெட்ரா க்விடோவாவை எதிர்த்து அஸரென்கா ஆடவுள்ளார். முன்னதாக நேற்று பெட்ரா க்விடோவா, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் லாரா அருபார்னாவை வீழ்த்தினார்.