விளையாட்டு

ஆசிய ஹாக்கி கோப்பை 2022 | தமிழக வீரர் கார்த்தியின் முதல் கோல்... இந்தியா vs பாகிஸ்தான் போட்டி டிரா

செய்திப்பிரிவு

ஜகார்த்தா: நடப்பு ஆசிய ஹாக்கி கோப்பைக்கான முதல் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இந்தோனேசியாவில் இன்று (மே 23) முதல் ஜூன் 1 வரை ஆசிய ஹாக்கி கோப்பை தொடர் நடைபெறுகிறது. இது 11-வது ஆசிய ஹாக்கி கோப்பை தொடராகும். மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன.

இந்தத் தொடரில் இந்தியா மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்தில் இந்தியா களம் காண்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் தமிழர்கள் கார்த்தி மற்றும் மாரீஸ்வரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் பதிவு செய்தன. அதனால் ஆட்டம் சமனில் முடிந்தது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதில், இந்திய அணி பதிவு செய்த அந்த கோலை ஸ்கோர் செய்தது தமிழகத்தை சேர்ந்த கார்த்தி.

SCROLL FOR NEXT