Son Heung-min. 
விளையாட்டு

ப்ரீமியர் லீக் | Son Heung-min: தங்கக் காலணி விருதை வென்ற முதல் ஆசிய வீரர்

செய்திப்பிரிவு

மான்செஸ்டர்: நடப்பு ப்ரீமியர் லீக் தொடரில் முகமது சாலா மற்றும் தென் கொரிய வீரர் Son Heung-min ஆகியோர் அதிக கோல்களை பதிவு செய்த வீரர்களாக தொடரை நிறைவு செய்துள்ளனர். அதனால் இருவரும் தங்கக் காலணி விருதை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இதில் 29 வயதான Son Heung-min, Tottenham Hotspur கால்பந்தாட்ட கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் கடந்த 2015 முதல் அந்த அணியில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 231 போட்டிகளில் விளையாடி, 93 கோல்களை அவர் பதிவு செய்துள்ளார். இதில் நடப்பு ப்ரீமியர் லீக் தொடரில் மட்டுமே அவர் 23 கோல்களை பதிவு செய்துள்ளார். மறுபக்கம் எகிப்து வீரர் முகமது சாலாவும் நடப்பு சீசனில் 23 கோல்களை பதிவு செய்துள்ளார். அதனால் இருவருக்கும் தங்கக் காலணி விருது பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் ப்ரீமியர் லீக் தொடரில் இந்த விருதை வெல்வது இதுவே முதல்முறை. தென் கொரிய அணிகக்க 98 போட்டிகளில் விளையாடி, 31 கோல்களை பதிவு செய்துள்ளார் Son Heung-min. இவர் தென் கொரிய அணியின் கேப்டனும் கூட. முன்கள வீரரான அவர் ஆசிய கண்டத்தின் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக அவர் அறியப்படுகிறார்.

Tottenham Hotspur அணி நடப்பு லீக் தொடரில் நான்காவது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்துள்ளது. முகமது சாலா விளையாடிய லிவர்பூல் அணி தொடரில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

SCROLL FOR NEXT