விளையாட்டு

தாய்லாந்து பாட்மிண்டன் தொடரின் அரை இறுதியில் சிந்து தோல்வி

செய்திப்பிரிவு

தாய்லாந்து பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதி சுற்றில் தோல்வியடைந்தார்.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து, ஒலிம்பிக் சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளவருமான சீனாவின் சென் யு பெயியை எதிர்கொண்டார்.

43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து 17-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

SCROLL FOR NEXT