ரவி தஹியா, பஜ்ரங் புனியா, தீபக் புனியா. 
விளையாட்டு

காமன்வெல்த் போட்டிகள் 2022 | மல்யுத்த விளையாட்டில் பங்கேற்க தேர்வான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: 2022 ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் மல்யுத்த விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது. இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. 72 நாடுகளை சேர்ந்த 5,054 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த விளையாட்டு தொடரில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 20 விளையாட்டுகளில் சுமார் 283 ஈவெண்டுகள் நடைபெற உள்ளது. நேற்று மல்யுத்த விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள வீராங்கனைகளின் விவரம் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இன்று வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ரவி தஹியா (57 கிலோ), பஜ்ரங் புனியா (65 கிலோ), நவீன் (74 கிலோ), தீபக் புனியா (86 கிலோ), தீபக் (97 கிலோ), மோஹித் தஹியா (125 கிலோ) ஆகியோர் இந்தியாவில் நடைபெற்ற தகுதிப் போட்டிகள் நடத்தப்பட்டதன் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் ரவி தஹியா மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT