மகளிர் உலக குத்துச் சண்டை போட்டியில் இந்தியாவின் சர்ஜூ பாலா தேவி காலிறுதிக்கு முன்னேறினார்.
கஜகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் காலிறு திக்கு முந்தைய சுற்றில் சர்ஜூ பாலா 48 கிலோ எடைப்பிரிவில், இலங்கையின் எராண்டி கலு ஹாத்தை எதிர்கொண்டார். இதில் புள்ளிகள் ஏதும் விட்டுக்கொடுக் காமல் சர்ஜூபாலா 3:0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் சர்ஜூபாலா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் கஜகஸ்தானின் நஸிம் கையாஸிபேவை எதிர்கொள்கிறார்.
81 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சீமா பூனியா அஜர் பைஜானின் ஐனூர் ரஸெயே வாவை தோற்கடித்தார். காலிறுதி யில் சீனாவின் ஷிஜின் வாங்கை சந்திக்கிறார் பூனியா. 64 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பவித்ரா, ஆஸ்திரேலியாவின் ஸ்கை நிக்கோல்சனிடம் தோல்வி யடைந்தார்.