விளையாட்டு

IPL 2022 | கொல்கத்தாவுக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ

செய்திப்பிரிவு

புனே : கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 176 ரன்களை சேர்த்தது.

ஐபிஎல் 15-வது சீசனின் இன்றைய 53-வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணிக்கு குயின்டன் டிகாக், கே.எல்.ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் விக்கெட்டாகி வெளியேறினார்.

ஒருபுறம் குயின்டன் டீ காக் அதிரடி காட்ட, தீபக் ஹூடா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 50 ரன்கள் சேர்த்திருந்த டி காக் 7-வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி நடையைக் கட்டினார்.

அடுத்து தீபக் ஹூடா 41 ரன்களிலும், குருணால் பாண்ட்யா 25 ரன்களிலும் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து 3 சிக்ஸர்களை விளாசிய மார்கஸ் ஸ்டோனிஸ் 28 ரன்களிலும், ஜேசன் ஹோல்டர் 13 ரன்களிலும், நடையைக் கட்டினர். ஆயுஷ் படோனி 13 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். துஷ்மந்த சமீர ரன் எதுவும் எடுக்காமல் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 176 ரன்களை சேர்த்தது.

கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி, ஷிவம் மாவி, சுனில் நரேன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT