ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்திடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. யுவராஜ் சிங் 30 பந்தில் 44 ரன்னும், ஹென்ரிக்ஸ் 21 பந்தில் 31 ரன்னும் எடுத்தனர். கொல்கத்தா குல்தீப் யாதவ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
163 ரன்கள் இலக்குடன் விளை யாடிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப் புக்கு 140 ரன்களே எடுக்க முடிந்தது. ஆட்ட நாயகனாக ஹென்ரிக்ஸ் தேர்வானார். 22 ரன்கள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான 2 வது தகுதி சுற்று போட்டியில் விளையாட தகுதி பெற்றது. கொல்கத்தா அணி தொடரில் இருந்து வெளியேறியது.
தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் காம்பீர் கூறியதாவது:
163 ரன் இலக்கு என்பது இந்த ஆடுகளத்தில் எடுக்க கூடியது தான். பேட்ஸ்மேன்களின் மோச மான ஆட்டத்தால் தோல்வி ஏற் பட்டது. எந்த ஒரு ஜோடியும் நிலைத்து நிற்கவில்லை. காலின் முன்ரோ ரன் அவுட் திருப்புமுனை யாக அமைந்தது.
எந்த ஒரு வீரராவது 60 அல்லது 70 ரன் எடுத்து களத்தில் நிலைத்து நின்றிருந்தால் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு எதிர் அணியை கட்டுப்படுத்தினார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் தான் சரியாக செயல்படவில்லை.
இவ்வாறு காம்பீர் கூறினார்.