ஹர்ஷல் படேல்.  
விளையாட்டு

IPL 2022 | வெற்றிக்கு பிறகு 'லகான்' பட நடிகர்களின் உணர்ச்சியை நான் உணர்ந்தேன் - ஆர்சிபி வீரர் ஹர்ஷல் படேல்

செய்திப்பிரிவு

மும்பை: வெற்றிக்கு பிறகு 'லகான்' படத்தில் நடித்தவர்களின் உணர்ச்சியை நான் உணர்ந்தேன் என தெரிவித்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் ஹர்ஷல் படேல்.

நடப்பு ஐபிஎல் சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பெற்றுள்ளது ஆர்சிபி. வரிசையாக மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய அந்த அணி சென்னையை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. பேட்டிங், பவுலிங் என ஒரு அணியாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஆர்சிபி. இந்நிலையில், அந்த வெற்றி தருணத்தின் உணர்ச்சியை விவரணை செய்துள்ளார் ஹர்ஷல் படேல்.

"வெற்றி பெற்றதில் திருப்தி. லகான் திரைப்படத்தில் போட்டியில் வென்ற பிறகு அவர்களின் உணர்ச்சி எப்படி இருந்ததோ அப்படி உணர்கிறேன் நான். அதில் வெற்றிக்கு பிறகு மழை பொழியும். வெற்றி இல்லாமல் நாங்கள் வறண்டு கிடந்தோம். இப்போது அதை பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார் ஹர்ஷல் படேல்.

நடப்பு சீசனில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்ஷல் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சென்னை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் அவர். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார்.

SCROLL FOR NEXT