மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனுக்கான பிளே-ஆஃப் சுற்று அட்டவணையை வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இதில் போட்டிகள் நடைபெறும் மைதானம் குறித்த விவரமும் வெளியாகி உள்ளது.
உலக கிரிக்கெட் அரங்கில் கவனம் ஈர்த்துள்ள டி20 கிரிக்கெட் தொடர்களில் ஒன்று ஐபிஎல். நடப்பு ஆண்டுக்கான தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 70 லீக் போட்டிகளும் மும்பை, புனே ஆகிய பகுதிகளில் உள்ள மைதானங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஏற்பாடு. அதன்படியே இப்போது போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த சுற்றான பிளே-ஆஃப் சுற்று எங்கு நடக்கிறது என்ற விவரம் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று…
> மே 24 - குவாலிபையர் 1 - கொல்கத்தா
> மே 25 - எலிமினேட்டர் - கொல்கத்தா
> மே 27 - குவாலிபையர் 2 - அகமதாபாத்
> மே 29 - இறுதிப்போட்டி - அகமதாபாத்
புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும். அதே போல் மே 23 முதல் 28 வரையில் நான்கு போட்டிகள் கொண்ட மகளிர் டி20 சேலஞ்ச் தொடர் புனேவில் நடைபெறும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.