விளையாட்டு

மேக்ஸ்வெல் திருமண வரவேற்பு விழாவில் 'ஊ சொல்றியா' பாடலுக்கு நடனமாடிய விராட் கோலி

செய்திப்பிரிவு

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் மேக்ஸ்வெல்லின் திருமண வரவேற்பு விழாவில் 'ஊ சொல்றியா' பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார் விராட் கோலி. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணியில் மூத்த வீரராக விளையாடி வருகிறார் விராட் கோலி. இதற்கு முந்தைய சீசன்களில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டவர் அவர். இந்நிலையில், 'புஷ்பா' படத்தில் இடம்பெற்றுள்ள ஹிட் பாடலான 'ஊ சொல்றியா' பாடலுக்கு நடனமாடியுள்ளார் கோலி. இந்தப் பாடல் இந்தியாவின் பட்டித்தொட்டி முதல் ஸ்மார்ட் சிட்டி வரையில் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

சக ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெல்லின் திருமண வரவேற்பு விழாவில் தனது இணையர் அனுஷ்கா சர்மாவுடன் கலந்து கொண்டுள்ளார் கோலி. அப்போது இந்தப் பாடலுக்கு அவர் நடனமாடியுள்ளார். அந்தக் காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

அண்மையில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்த வினி ராமனை கரம் பிடித்தார் மேக்ஸ்வெல். இவர்கள் இருவரும் நீண்ட நாள் காதலர்களாக இருந்து இல்லற வாழ்க்கையில் இணைந்துள்ளனர். அவர்களுக்ககாக ஆர்சிபி இந்த வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஆர்சிபி வீரர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT