விராட் கோலி மற்றும் கங்குல் (கோப்புப்படம்) 
விளையாட்டு

IPL 2022 | 'கோலி நிச்சயம் ஃபார்முக்கு திரும்புவார்' - கங்குலி

செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நிச்சயம் ஃபார்முக்கு திரும்புவார் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி.

நடப்பு ஐபிஎல் சீசனில் 9 போட்டிகளில் விளையாடி வெறும் 128 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி. அவரது மோசமான பார்ம் குறித்து பலரும் பேசி வருகின்றனர். நடப்பு சீசனில் ஐந்து முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்துள்ளார் கோலி. இதில் இரண்டு முறை டக் அவுட்டாகி உள்ளார். இந்நிலையில், கோலி குறித்து பேசியுள்ளார் கங்குலி.

"கோலி மகத்தான வீரர். அவர் நிச்சயம் ஃபார்முக்கு திரும்புவார். விரைவில் ரன்கள் குவிக்க தொடங்குவார் என நினைக்கிறேன். விராட் கோலி என்ன நினைக்கிறார் என்பது எனக்கு தெரியாது. ஆனாலும் அவர் ஃபார்முக்கு திரும்புவது உறுதி" என கங்குலி தெரிவித்துள்ளார். அதே போல மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் ஃபார்முக்கு திரும்புவார் எனத் தெரிவித்துள்ளார் கங்குலி.

இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் கேப்டன் பொறுப்பு மாற்றம் கண்ட போது கோலி மற்றும் கங்குலி என இருவருக்கும் இடையே கருத்து முரண் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் சீசன் போட்டிகளை பார்த்து வருவதாகவும். ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் உம்ரான் மலிக் அபாரமாக விளையாடி வருவதாகவும் கங்குலி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT