விளையாட்டு

விளையாட்டு துளிகள்: அரையிறுதியில் ஜோஸ்னா

செய்திப்பிரிவு

ஹாங்காங் ஸ்குவாஸ் போட்டியில் இந்தியாவின் ஜோஸ்னா சின்னப்பா அரையிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதியில் அவர் ஆஸ்திரேலியாவின் ராச்சல் கிரின்ஹாமை 15-13, 11-6, 6-11, 9-11, 11-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். அரையிறுதியில் ஹாங்காங்கின் அனியை எதிர்கொள்கிறார் ஜேஸ்னா.

மற்றொரு இந்திய வீராங்கனையான தீபிகா பல்லிக்கல் 8-11, 6-11, 8-11 என்ற நேர் செட்டில் நியூஸிலாந்தின் ஜோலேவிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

***********

நியூஸி. பயிற்சியாளர் பதவி காலம் நீட்டிப்பு

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெஸனின் பதவிக்காலம் வரும் 2019 உலகக் கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹெஸனின் ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ள நிலையில் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 41 வயதான ஹெஸன் கடந்த 2012-ல் பொறுப்பேற்றார். இவரது பயிற்சி காலத்தில் தான் நியூஸிலாந்து அணி கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இறுதி போட்டி வரையும், இந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரையும் முன்னேறியிருந்தது.

நியூஸிலாந்து அணி ஐசிசி தரவரிசையில் தற்போது டி 20-ல் முதலிடத்திலும், ஒருநாள் போட்டியில் 2-வது இடத்திலும், டெஸ்டில் 5-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

***********

2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஹெட்டிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் செஸ்டர் லீ ஸ்ட்ரீட் நகரில் இன்று தொடங்குகிறது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும் இங்கிலாந்து இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

SCROLL FOR NEXT