கெய்ரான் பொல்லார்ட். 
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் அறிவிப்பு | கிரிக்கெட் வீரர்களின் ரியாக்‌ஷன்

செய்திப்பிரிவு

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியின் மகத்தான ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான கெய்ரான் பொல்லார்ட், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக அறிவித்துள்ளார். அவரது முடிவை அறிந்த கிரிக்கெட் வீரர்கள் அதுகுறித்து என்ன சொல்லி உள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.

கடந்த 2007-ல் சர்வதேச கிரிக்கெட் களத்திற்குள் என்ட்ரி கொடுத்தவர் கெய்ரான் பொல்லார்ட். இவரை கிரிக்கெட் உலகின் பொல்லாதவன் எனவும் சொல்லலாம். அந்த அளவுக்கு இவரது ஆட்டம் அமர்க்களமாக இருக்கும். தனது நாட்டுக்காக 196 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார் பொல்லார்ட். அதன் மூலம் 4,275 ரன்கள் மற்றும் 97 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். துடிப்பான ஃபீல்டரும் கூட. 6 அடி 4 அங்குலம் கொண்ட உயரம்தான் இவரது பிளஸ். கிரிக்கெட் பந்தை அடித்து நொறுக்கும் அதிரடி பேட்ஸ்மேன்.

இதுதவிர உலக அளவில் நடைபெறும் லீக் உட்பட உள்நாட்டு கிரிக்கெட்டிலும் விளையாடிய அனுபவம் உள்ளவர். நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கென இந்தியாவில் ரசிகர் பட்டாளமும் உண்டு. இத்தகைய சூழலில் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் பொல்லார்ட்.

கிறிஸ் கெயில்: "நான் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே நீங்கள் ஓய்வு பெற்றுள்ளதை என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு வாழ்த்துகள். உங்களது அடுத்த அத்தியாயத்திற்கு எனது வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

லசித் மலிங்கா: "அவரிடம் சர்வதேச கிரிக்கெட் எஞ்சியுள்ளதாகவே நான் பார்க்கிறேன். இருந்தாலும் அவரது முடிவுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். உங்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். எங்களை எண்டர்டெயின் செய்தமைக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

சுனில் நரைன்: "இது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தேவையானதை அளிக்கும் திறன் இன்னும் அவரிடம் உள்ளது. ஆனால் இது தனக்கு ஓய்வு பெற வேண்டிய சரியான நேரம் என அவர் நினைத்துள்ளார். அதுதான் முக்கியம்" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT