மகளிர் உலக குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சோனியா லேதர் வெள்ளி பதக்கம் வென்றார்.
கஜகஸ்தானின் அஸ்டானா நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவு இறுதிசுற்றில் சோனியா லேதர், இத்தாலியின் அலிஸியா மெஸியானோவை எதிர்த்து விளையாடினார். இதில் சோனியா 1-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார்.
24 வயதான ஹரியானாவை சேர்ந்த சோனியா முதல் செட்டை தனது அதிரடி தாக்குதல் மூலம் கைப்பற்றினார். ஆனால் அடுத்த இரு செட்களிலும் மெஸியானோ ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றார்.