மும்பை: லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 181 ரன்களை குவித்தது. இதில் பாப் டூ பிளஸ்சிஸ் அதிரடியாக ஆடி 64 பந்துகளில் 96 ரன்களை குவித்தார்.
15-வது ஐபிஎல் சீசனின் இன்றைய 31-வது லீக் போட்டியில் பெங்களூரு அணியும் லக்னோ அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணிக்கு அனுஜ் ராவத், பாப் டூ பிளசிஸ் இணை தொடக்கம் கொடுத்தது. பெங்களூருக்கு இது மோசமான தொடக்கமாகவே அமைந்தது. அனுஜ் ராவத் 4 ரன்களில் வெளியேற, அடுத்த வந்த கோலி ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். மேக்ஸ்வெல்லும் பெரிய அளவில் நம்பிக்கை கொடுக்காமல் 23 ரன்களில் நடையைக் கட்டினார். சுயாஷ் பிரபுதேசாய் 10 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த பெங்களூரு அணிக்கு பாப் டூ ப்ளஸ்சிஸ் பெரும் பக்கபலமாக திகழ்ந்தார். 61 பந்துகளில் 94 ரன்களை குவித்த அவரை ஜெசன் ஜேசன் ஹோல்டர் வெளியேற்றினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 181 ரன்களை குவித்தது. தினேஷ் கார்த்திக் 13 ரன்களுடனும், ஹர்ஷல் படேல் ரன் எதுவும் எடுக்காமல் பேட்ஸ்மேன்களாக களத்தில் இருந்தனர்.
லக்னோ அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர், துஷ்மன் சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், குர்ணால் பாண்ட்யா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.