மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனுக்கான போட்டிகளை வர்ணனை செய்து வருகிறார் சுனில் கவாஸ்கர். அவர் கோஹினூர் வைரம் குறித்து பிரிட்டிஷ் நாட்டு வர்ணனையாளரிடம் வேடிக்கையாக கேட்டுள்ளார். இது நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான போட்டிகளை வர்ணனை செய்து வருகிறார். சமயங்களில் அந்த பணியின்போது வேடிக்கையாக பேசி சில விஷயங்களை முன்னெடுப்பது வழக்கம். அந்த வகையில் தன்னுடன் வர்ணனை பணியை கவனித்துக் கொண்டிருக்கும் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஆலன் வில்கின்ஸிடம் வேடிக்கையாக ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்வி கொஞ்சம் விவகாரமானதாகவும் அமைந்துள்ளது.
லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடியபோது இந்தக் கேள்வியை கேட்டுள்ளார் கவாஸ்கர். போட்டியின்போது மும்பையின் ‘மரைன் டிரைவ்’ காட்சியை சில நொடிகள் காட்சிப்படுத்தப்பட்டது. இரவு நேரத்தில் அதில் பயணித்த வாகனங்களின் முகப்பு விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அதை இங்கிலாந்து ராணியின் நெக்லஸ் உடன் ஒப்பீடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ‘நாங்கள் இன்னும் கோஹினூர் வைரத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி விலைமதிப்பற்ற அந்த வைரத்தை இங்கிலாந்து அரசாங்கத்திடமிருந்து வாங்கித்தர முடியுமா?’ என கேட்டிருந்தார் கவாஸ்கர். அது பல இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தொடர்ந்து பலரும் அதற்கு தங்களது ரியாக்ஷனை வெளிப்படுத்தியுள்ளனர்.
#SunnyGavaskar demands the Kohinoor