ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத்தில் நடை பெறும் ஆட்டத்தில் வார்னர் தலை மையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத், தோனி தலைமையி லான ரைசிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, இரு தோல்விகளை பதிவு செய்துள்ளது. முதல் இரு ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த போதிலும் அதன் பின்னர் எழுச்சி பெற்று தொடர்ச்சியாக 3 ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளது ஐதராபாத் அணி.
அதேவேளையில் புனே அணி 5 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகளை பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பையை வீழ்த்திய நிலையில் அதன்பின்னர் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது.
ஐதராபாத் கேப்டன் வார்னர் நல்ல பார்மில் உள்ளார். அவர் இந்த தொடரில் இதுவரை 4 அரை சதங்கள் உட்பட 294 ரன்கள் குவித்துள்ளார். முதல் மூன்று ஆட்டங்களிலும ரன் சேர்க்க சிரமப்பட்ட ஷிகர்தவண் கடைசியாக குஜராத் அணிக்கு எதிராக 53 ரன்னும், பஞ்சாப் அணிக்கு எதிராக 45 ரன்னும் சேர்த்தது அவரது தன்னம்பிக்கை யை அதிகரித்துள்ளது. ஹென் ரிக்ஸ், மோர்கன், நமன் ஓஜா ஆகி யோரும் பேட்டிங்கில் கைக் கொடுக்கக் கூடியவர்கள்.
பந்துவீச்சும் வலுவாக உள்ளது. புவனேஷ்வர் குமார், முஸ்டாபிஸூர் ரஹ்மான் ஆகியோரது ஸ்விங், கட்டர் பந்து வீச்சு எதிரணிக்கு நெருக்கடி தரும் வகையில் அமைந்திருப்பது பலம் சேர்க்கிறது. இவர்களை தவிர பரிந்தர் ஷரண், தீபக் ஹூடா, பிபுல் சர்மா ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் பந்து வீசக் கூடியவர்களாக உள்ளனர்.
புனே அணி இந்த சீசனில் கடுமையாக திணறி வருகிறது. வெற்றிக்கான அணி சேர்க்கையை தேர்வு செய்வதிலேயே கடும் குழப்பம் நிலவுகிறது. தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி ரன் குவிக்கும் வீரர்களும், வலுவில்லாத பந்து வீச்சும் அணியின் மிகப்பெரிய பலவீனமாக உள்ளது. அஜிங்க்ய ரஹானே ஏறக்குறைய பந்துக ளுக்கு நிகராகவே ரன் சேர்ப்ப தால் அணியின் ரன்விகிதம் குறுகிய வடிவிலான போட்டிக்கு தகுந்தபடி ஏற்றம் காணாமல் இருக்கிறது.
தோனி, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோ ரிடம் இருந்தும் பெரிய அளவி லான வகையில் அதிரடி ஆட்டம் வெளிப்படவில்லை. கெவின் பீட் டர்சனும் காயம் காரணமாக அணி யில் இருந்து விலகியிருப்பது பலவீனத்தை அதிகரித்துள்ளது.
பந்து வீச்சில் ரஜாத் பாட்டி யாவை தவிர மற்ற அனைவருமே அதிக ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த தொடரில் விக்கெட்கள் வீழ்த்த சிரமப்பட்டு வருகிறார். முருகன் அஸ்வின் விக்கெட் வீழ்த்தினாலும் அதிக ரன்களை விட்டுக்கொடுக்கிறார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற புனே அணி கடுமையாக போராட வேண்டியதிருக்கும்.