மும்பை: பட்லர் விளாசிய அசத்தல் சதத்தின் துணையுடன், மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் 193 ரன்கள் குவித்தது.
நடப்பு ஐபிஎல் சீசனின் ஒன்பதாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங் தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்காக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 1 ரன் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து களத்திற்கு வந்த தேவ்தத் படிக்கல் 7 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் வந்த அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் உடன் இணைந்து 82 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் பட்லர். தொடர்ந்து ஹெட்மயர் உடன் 53 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் பட்லர். அதோடு இந்த சீசனில் முதல் சதத்தை பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். 66 பந்துகளில் இந்த சதத்தை அவர் பதிவு செய்தார் பட்லர். ஐபிஎல் அரங்கில் அவர் பதிவு செய்துள்ள இரண்டாவது சதம் இது.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. மும்பை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 194 ரன்கள் தேவை. மும்பை அணிக்காக ஜஸ்ப்ரீத் பும்ரா 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்கள் கைப்பற்றி 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.