பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் அவர் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நிஷிகோரியை 6-4, 7-5 என்ற நேர்செட்டில் வீழ்த்தினார்.
வெற்றி குறித்து நடால் கூறும்போது, "இந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக சர்வீஸ் செய்தேன். இது தான் முக்கியமாக அமைந்தது. ஆரம்பத்திலேயே சர்வீஸ்கள் நல்ல முறையில் அமைந்தால் சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடிந்தது.
இரண்டாவது செட்டில் அதிக வாய்ப்புகள் நழுவிய போதிலும் மனதளவில் போராடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
பார்சிலோனா போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் களிமண் தரையில் 49 சாம்பியன் பட்டங்கள் வென்ற அர்ஜென்டினாவின் கில்லர்மோ விலாஸின் சாதனையை நடால் சமன் செய்தார்.