மெக்சிகோ கோல் கீப்பர் கில்லர்மோ ஓச்சா 4 அதிஅற்புதங்களைச் சாதித்தார் என்று பிரேசில் வீரர் ஃபிரெட் பாராட்டியுள்ளார்.
மெக்சிகோவுக்கும் பிரேசில் அணிக்கும் இன்று அதிகாலை நடைபெற்ற போட்டி கில்லர்மோ ஓச்சாவின் அதிஅற்புத கோல் கீப்பிங்கினால் எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி 0-0 என்று டிரா ஆனது.
அது குறித்து ஃபிரெட் (குரேசியாவுக்கு எதிராக அன்று பெனால்டி கிக் வாங்கிக் கொடுத்தவர்) கூறுகையில், "தனது வலையைப் பாதுகாத்து தன் அணி கோல் இல்லாத டிராவைச் சாதிக்க 4 அதிஅற்புதங்களை அவர் சாதித்தார்” என்று கூறியுள்ளார்.
அதாவது ஓச்சா தடுத்த 4 உத்தரவாதமான கோல் ஷாட்களை அவர் குறிப்பிடுகிறார்.
முன்னாள் நட்சத்திரம் பீலே கூறுகையில் நன்றாக விளையாடியும் வெற்றி கைகூடவில்லை என்றார்.
மெக்சிகோ பயிற்சியாளர் ஸ்கொலாரியும் மெக்சிகோவைப் பாராட்டினார். ஆனால் அடுத்த சுற்றுக்கு பிரேசில் நிச்சயம் முன்னேறிவிடும் என்று அவர் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.