கோவில்பட்டியில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு கோப்பையை கடம்பூர் ராஜு எம்எல்ஏ வழங்கினார். 
விளையாட்டு

மாநில ஹாக்கி போட்டியில் சென்னை அணி வெற்றி

செய்திப்பிரிவு

கோவில்பட்டியில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

கோவில்பட்டியில் பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி கடந்த 7-ம் தேதி தொடங்கியது. போட்டியில் 28 அணிகள் கலந்து கொண்டன.

நேற்று காலை நடந்த முதல் அரையிறுதி போட்டியில் சென்னை தமிழ்நாடு ஹாக்கி அகாடமி அணியும், கோவில்பட்டி பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இதில், 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சென்னை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

2-வது ஆட்டத்தில், கடலூர் ஜெம்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், மதுரை தென்னக போலீஸ் அணியும் மோதின. இதில், 3 - 1 என்ற கோல் கணக்கில் மதுரை அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

மாலையில் நடந்த 3, 4-வது இடங்களுக்கான போட்டியில் கோவில்பட்டி பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், கடலூர் ஜெம்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. இதில், 7 - 4 என்ற கோல் கணக்கில் கடலூர் அணி வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

இறுதிப்போட்டியில் சென்னை தமிழ்நாடு ஹாக்கி அகாடமி அணியும், மதுரை தென்னக போலீஸ் அணியும் மோதின. இதில், சென்னை அணி 3 - 1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை கடம்பூர் ராஜு எம்எல்ஏ வழங்கினார். விழாவில் கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாசலம், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர்கள் ராதாகிருஷ்ணன், ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் கன்னிச்சாமி தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT