விளையாட்டு

ஓஎன்ஜிசி-க்கு 2வது வெற்றி

செய்திப்பிரிவு

சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அரைஸ் ஸ்டீல் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று ஆடவர் பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஓன்ஜிசி 63-48 என்ற கணக்கில் விஜயா வங்கியை தோற்கடித்தது.

ஓன்ஜிசி சார்பில் அம்ரித் பால்சிங் 11 புள்ளிகள் சேர்த்தார். இந்த அணிக்கு இது இரண்டாவது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் ஓஎன்ஜிசி அணி, தெற்கு ரயில்வே அணியை தோற்கடித்திருந்தது. மற்றொரு ஆட்டத்தில் கேஎஸ்இபி கேரளா அணி 63-46 என்ற கணக்கில் பஞ்சாப் அணியை தோற்கடித்தது.

இந்திய ராணுவ அணி 66-82 என்ற கணக்கில் ஆர்சிஎப் அணியிடம் தோல்வியை சந்தித்தது. ஆர்சிஎப் அணி தரப்பில் பிரகாஷ் மிஸ்ரா 36 புள்ளிகள் குவித்தார்.

.

SCROLL FOR NEXT