விளையாட்டு

விராட் கோலி, டிவில்லியர்ஸை யார் என்று கேட்ட ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர்

இரா.முத்துக்குமார்

விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸை ‘யார் இவர்கள்’ என்று ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஆடம் ஸம்பா கேட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு அணியும், புனே அணியும் ஐபிஎல் கிரிக்கெட்டில் மோதின. இதில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது, இதனையடுத்து பெங்களூரு அணியின் ஆஸ்திரேலிய பவுலர் கேன் ரிச்சர்ட்ஸன் புனே அணியின் தன் சக ஆஸி.வீரரான லெக் ஸ்பின்னர் ஆடம் ஸம்பாவுக்கு ட்வீட் செய்யும் போது, விராட் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் படத்தை வெளியிட்டு அதற்குக் கீழே, “ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் இருவரும் பேட் செய்வதைப் பார்ப்பது என் அதிர்ஷ்டம்’ என்று விதந்தோதியுள்ளார்.

இதற்கு ஆடம் ஸம்பா, “யார் இவர்கள்?” என்று கேலியாகக் கேட்டுள்ளார். இதற்கும் பதில் அளித்த கேன் வில்லியம்சன், “இசாந்த் சர்மாவிடம் கேட்டுப்பாருங்க்ள்” என்று ட்வீட் செய்தார்.

காரணம் அந்தப் போட்டியில் இசாந்த் சர்மாவின் பந்து வீச்சை விராட் கோலி, டிவில்லியர்ஸ் இருவரும் பதம் பார்க்க இசாந்த் 4 ஓவர்களில் 47 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

          
SCROLL FOR NEXT