விளையாட்டு

உதகை குதிரைப் பந்தயம்: புத்தாண்டு கோப்பையை வென்றது ‘பேபுலஸ் டச்’

செய்திப்பிரிவு

தமிழ்ப் புத்தாண்டையொட்டி உதகையில் நேற்று தொடங்கிய குதிரைப் பந்தயத்தில், தமிழ்ப் புத்தாண்டு கோப்பையை ‘பேபுலஸ் டச்’ வென்றது.

கோடை சீசனின் முக்கிய நிகழ்வான இந்த குதிரைப் பந்தயத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 700 குதிரைகள் பங்கேற்கின்றன. பயிற்சி அளிக்க 25 பேர், 40 ஜாக்கிகளும் வந்துள்ளனர். இப்போட்டி, 24 நாட்கள் நடைபெறுகின்றன.

நேற்று நடைபெற்ற முதல் நாள் போட்டியில், 7 பந்தயங்கள் நடந்தன. ‘வரவேற்பு கோப்பை’ பந்தயத்தில், எம்.ஆர்.லட்சுமணனுக்கு சொந்தமான ‘சதர்ன் ஸ்கை’ குதிரை வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளருக்கு, மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகக் குழு உறுப்பினர் ரமேஷ் ரங்கராஜன் கோப்பையை வழங்கினார்.

இதையடுத்து நடந்த தமிழ்ப் புத்தாண்டு கோப்பைக்கான பந்தயத்தில், ‘பேபுலஸ் டச்’ என்ற குதிரை வெற்றி பெற்றது. இந்தக் குதிரை, மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி அறக்கட்டளைக்கு சொந்தமானது.

வெற்றி பெற்ற குதிரையின் பயிற்சியாளர் நீரஜ் ராவலிடம், மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகி அரவிந்த் கணபதி கோப்பையை வழங்கினார்.

SCROLL FOR NEXT