விளையாட்டு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் மந்த கிரிக்கெட் பிட்ச்கள் மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் உள்ள 8 கிரிக்கெட் பிட்ச்களை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் தர கிரிக்கெட் சீசன் துவங்கவுள்ளதால் பழைய களிமண் பிட்ச்கள் அகற்றப்பட்டு புதிய செம்மண் பிட்ச்கள் அமைக்கப்படுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைச் செயலர் ஆர்.ஐ.பழனி இந்து பத்திரிக்கைக்கு இது பற்றி, “கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்த களிமண் பிட்ச்கள் திருப்திகரமாக இல்லை, இந்தப் பிட்ச்கள் மிகவும் மந்தமாக இருந்தன, இதற்கு முன்பு இருந்த உயிர்ப்புள்ள பிட்ச்களாக இது இருக்கவில்லை.

எனவே, பிசிசிஐ பிட்ச்கள் கமிட்டி தலைவர் தல்ஜித் சிங்கிடம் கே.பார்த்தசாரதி இட்ட பிட்ச்களில் கிரிக்கெட் ஆட்டங்களில் முடிவுகள் கிடைத்தது என்றும் அவரோ அல்லது இவரது வழிகாட்டுதலில் வேறு பிட்ச் தயாரிப்பாளரோ புதிய பிட்ச்களை வடிவமைத்துக் கொடுக்கவேண்டும் என்று கேட்டிருந்தோம்” என்றார்.

61 வயது பார்த்தசாரதி 42 ஆண்டுகளாக சேப்பாக்கம் பிட்ச் தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.

இவர், பிட்ச்களை 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா இங்கு விளையாடியபோது இருந்தவாறு அமைக்கவுள்ளோம் என்றார்.

களிமண் பிட்சில் நிறைய நீரை தினசரி அடிப்படையில் தெளித்துக் கொண்டேயிருக்கவேண்டும். இது டெஸ்ட் போட்டியின் முதல் நாளுக்குப் பிறகு ஈரப்பசை காய்ந்து விடுவதில் போய் முடியும் பிறகு பிட்ச் மிகவும் மந்தமாகிவிடும். ஸ்பின்னர்களுக்கு பந்து திரும்பினாலும் மெதுவாகவே திரும்பும். என்று கூறுகிறார் பார்த்தசாரதி.

செம்மண் தரை பிட்சில் நல்ல பவுன்ஸ் இருப்பதோடு, ஸ்பின்னர்களுக்குப் பந்துகள் பவுன்ஸுடன் நன்றாகத் திரும்பும்.

எம்.ஆர்.எஃப் வேகப்பந்து அகாடமியில் பார்த்தசாரதி இத்தகைய பிட்ச்களைத் தயாரித்துக் கொடுத்ததை டெனிஸ் லில்லியே பாராட்டியுள்ளார்.

இந்தப் புதிய பிட்ச்கள் இன்னும் 4 மாதங்களில் தயாராகிவிடும்

SCROLL FOR NEXT