விளையாட்டு

300 விக்கெட்கள் வீழ்த்திய பிராவோ

செய்திப்பிரிவு

டி 20 கிரிக்கெட் போட்டிகளில் 300 விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை டிவைன் பிராவோ பெற்றார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அறிமுக அணியான குஜராத் லயன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் குஜராத் அணியின் நட்சத்திர வீரர் டிவைன் பிராவோ 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

அவர் தனது சிறப்பான பந்து வீச்சால் மேக்ஸ்வெல் 2, டேவிட் மில்லர் 15, விருதிமான் சஹா 20, ஸ்டோனிஸ் 33 ஆகிய ரன்களில் வெளியேற்றினார். பஞ்சாப் கேப்டன் டேவிட் மில்லரின் விக்கெட்டை வீழ்த்தியபோது 300 விக்கெட்களை கைப்பற்றி சாதனை படைத்தார் பிராவோ.

எல்லா வகையான டி 20 போட்டிகளிலும் இலங்கை வீரர் மலிங்கா 299 விக்கெட் கள் வீழ்த்தியதே சாதனை யாக இருந்தது. இந்த விக் கெட்களை அவர் 221 ஆட்டங் களில் கைப்பற்றியிருந்தார். இந்த சாதனையை தகர்த்த பிராவோ 292 ஆட்டங்களில் மொத்தம் 302 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். அதிக விகெட்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் இந்தியாவின் அஸ்வின் 15-வது இடத்தில் உள்ளார். அவர் 189 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

SCROLL FOR NEXT