விளையாட்டு

U-19 உலகக் கோப்பை வெற்றி: வீரர்களுக்கு ரூ,40 லட்சம் பரிசுத் தொகை அறிவித்தது பிசிசிஐ

செய்திப்பிரிவு

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.

இந்நிலையில் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 லட்சம் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதேபோல், வீரர்கள் அல்லாத துணை ஊழியர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள ட்வீட்டில், U-19 உலகக் கோப்பை வென்றமைக்காக வாழ்த்துகள். இது மிகவும் சிறப்பான தருணம். எல்லா சவால்களுக்கு இடையேயும் வெற்றி கண்டுள்ளீர்கள் விவிஎஸ் லக்‌ஷ்மண். நமது அணியின் ஒவ்வொரு இளைஞரும் ஆட்டத்தில் தங்களின் ஆன்மாவைச் செலுத்தி வரலாறு படைத்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.

U-19 இறுதிப் போட்டியில் இந்திய அணி களம் கண்டது இது 8-வது முறையாகும். இதில், இப்போதைய வெற்றியுடன் சேர்த்து இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்திய அணி இதற்கு முன்னதாக 2000, 2008, 2012, 2018 அகிய ஆண்டுகளில் U-19 உலகக் கோப்பையை வென்றுள்ளது.

SCROLL FOR NEXT