விளையாட்டு

பெங்களூருவை சமாளிக்குமா டெல்லி

செய்திப்பிரிவு

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை புரட்டி எடுத்தது. கெய்ல், விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஷேன் வாட்சன் ஆகியோருடன் தற்போது இளம் வீரரான சர்ப்ராஸ் கானும் அதிரடி வீரராக உருவெடுத்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சர்ப்ராஸ் கான் 10 பந்தில் 35 ரன்கள் குவித்து மிரட்டினார்.

அவரிடம் இருந்து இன்றும் சிறப் பான ஆட்டம் வெளிப்படக்கூடும். 51 பந்தில் 75 ரன் விளாசிய கோலி யும், 42 பந்தில் 82 ரன்கள் குவித்த டி வில்லியர்ஸூம் இன்றும் ரசிகர் களுக்கு விருந்து படைக்கக்கூடும்.

இளம் வீரர்களை உள்ளடக்கிய டெல்லி அணி முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோல்வி யடைந்த நிலையில் இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தன்னம்பிக்கையுடன் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது. ஜாகீர்கான், அமித் மிஸ்ரா ஆகியோரது அனுபவம் அணிக்கு பலமாக உள்ளது.

இந்த இருவர் கூட்டணி பெங்களூரு அதிரடி வீரர்களுக்கு சற்று நெருக்கடி தரக்கூடும்.

டெல்லி அணியில் பேட்டிங்கில் குயின்டன் டி காக் நல்ல பார்மில் உள்ளார். அவருக்கு இளம் வீரர்கள் சரியான ஒத்துழைப்பு கொடுத்து விளையாடும் பட்சத்தில் பெரிய அளவிலான ஸ்கோரை குவிக்க முடியும். டுமினி, கார்லோஸ் பிரத்வெயிட் ஆகியோருடன் இளம் வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்ஜூ சாம்சன், கருண் நாயர் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டால் நெருக்கடி தரலாம்.

SCROLL FOR NEXT