விளையாட்டு

அகில இந்திய கூடைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

அரைஸ் ஸ்டீல் நிறுவனம் சார்பில் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்குகிறது. போட்டிகள் வரும் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆடவர் பிரிவில் ஐஓபி, ஓஎன்ஜிஜி, இந்திய ராணுவம், விஜயா வங்கி, கேஎஸ்இபி, மத்திய ரயில்வே, பஞ்சாப், ஆர்சிஎப், வருமான வரி ஆகிய 9 அணிகளும் மகளிர் பிரிவில் தெற்கு ரயில்வே, அரைஸ் ரைஸிங் ஸ்டார், தெற்கு மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, சத்தீஸ்கர், கேஎஸ்இபி ஆகிய 6 அணிகளும் கலந்து கொள்கின்றன. ஆடவர் பிரிவிலும், மகளிர் பிரிவிலும் உள்ள அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆடவர், மகளிர் பிரிவில் பட்டம் வெல்லும் அணிக்கு தலா ரூ.2 லட்சமும், இரண்டாவது பரிசு பெறும் அணிகளுக்கு ரூ.1 லட்சமும், 3-வது பரிசாக ரூ.75 ஆயிரமும், 4-வது பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு கூடைப்பந்து சங்க துணைத்தலைவர் செந்தில் தியாகராஜனும், அரைஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆதவ் அர்ஜூனாவும் தெரிவித்தனர்.

முதல் நாளான இன்று ஆடவர் பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய ராணுவம்-கேஎஸ்இபி, ஐஓபி-ஆர்சிஎப், வருமானவரி-விஜயா வங்கி, ஓஎன்ஜிசி-மத்திய ரயில்வே அணிகளும் மகளிர் பிரிவில் சத்தீஸ்கர்-கிழக்கு ரயில்வே அணிகளும் மோதுகின்றன.

SCROLL FOR NEXT