மகளிர் டி 20 உலகக் கோப்பையில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெறு கின்றன. டெல்லி பெரோஷா கோட்லாவில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்க தேச அணிகளும் மோதுகின்றன. இதேவேளையில் தர்மசாலாவில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கி லாந்து-மேற்கிந்தியத் தீவுகள் பலப் பரீட்சை நடத்துகின்றன.
ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா தான் மோதிய இரு ஆட்டத்தில் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. இதே நிலையில் தான் இலங்கை அணியும் உள்ளது. இரு அணிக்குமே இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ளலாம்.
பி பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வியடைந்த நிலையில் 2வது ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது. வங்கதேச அணிக்கு இது கடைசி ஆட்டம். அந்த அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது.
இன்றைய ஆட்டத்தின் முடிவு அந்த அணிக்கு எந்த பாதிப்பை யும் ஏற்படுத்தாது. அதேவேளை யில் பாகிஸ்தான் அணிக்கு இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த அணி அரையிறுதிக்கான வாய்ப்பை பெறவேண்டுமானால் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
தர்மசாலாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத் தில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் பலப்பரீட்சை நடத்து கின்றன. இரு அணிகளுமே தலா இரு வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். இதனால் வெற்றி பெற கடும் போட்டி நிலவக்கூடும்.