ரவி சாஸ்திரி| கோப்புப்படம் 
விளையாட்டு

என்னைச் சுற்றி இருந்த சிலரே இந்திய அணி தோல்வியை விரும்பினார்கள்: மனம்திறக்கும் ரவி சாஸ்திரி 

செய்திப்பிரிவு


நான் பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணி தோற்க வேண்டும் என்று என்னைச்சுற்றியிருந்த சிலரே விரும்பினார்கள். ஆனால் அவர்கள் நினைப்புக்கு மாறாக நாங்கள் வெற்றி மேல் வெற்றியாகக் குவித்தோம் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆங்கில நாளேடு ஒன்றுக்கு தனது அனுபவங்களை பேட்டியாக அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இந்திய அணி தோற்க வேண்டும் என்று நினைத்த சிலரும் என்னை சுற்றி இருந்தார்கள். நிறைய எதிர்மறை சக்திகள் இருந்தாலும் எதும் எங்களைத் தீண்டவில்லை. இந்திய அணி தோற்க வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள் ஆனால் வெற்றி மீது வெற்றிகளைக்குவித்து, சாதனை படைத்ததைப் பார்த்து பொறாமைப் பட்டார்கள். இந்திய அணி தோற்க வேண்டும் என நினைத்தார்கள் மாறாக நாங்கள் வெற்றி பெற்றுக்கொண்டேதான் இருந்தோம்.

இங்கிலாந்துக்கு செல்லும் முன்னரே என்னுடைய பதவிக்காலம் முடிவுக்கு வரப்போகிறது என்பதை உணர்ந்துவிட்ேடன். 60 வயதாகிவிட்டது, பயிற்சியாளர் பதவி குறித்த உச்ச நீதிமன்ற விதிமுறைகள், கரோனா, தனிமைப்படுத்துதல், பயோபபுள் போன்றவற்றுக்குள் நீண்டநாட்கள் இருக்க முடியாது என்பதை அறிந்தேன்

நான் 2-வது முறையாக இந்திய அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது பலருக்கும் பிடிக்கவில்லை. நான் பிசிசிஐ அமைப்பைக் குறிப்பிடவில்லை. அதற்குள் இருந்த சிலர்தான் முதலில் என்னை நிராகரித்துவிட்டு, 9 மாதங்களுக்குபின் என்னை அழைத்து பயிற்சியாளர் பதவி அளித்தனர். குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே நான் பயிற்சியாளராக வரக்கூடாது என்று சிலர் விரும்பினர். ஆனால் என்ன செய்ய இதுதான் வாழ்க்கை

இவ்வாறு ரவிசாஸ்திரி தெரிவித்தார்

SCROLL FOR NEXT