தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இந்திய மகளிர் ஹாக்கி அணி நேற்று ஜெர்மனியுடன் மோதியது. இதில் இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் ஜெர்மனி அணிக்கு எதிராக இந்திய அணி பெறும் இரண்டாவது தோல்வி இதுவாகும்.
முதல் பாதியில் இரு அணிகளும் தலா இரு கோல்களுடன் சமநிலையில் இருந்தன. இந்திய தரப்பில் சுனிதா லக்ரா, அணுராதா தேவி தலா ஒரு கோலும், ஜெர்மனியின் லிஸா, ஹன்னா க்ரூகர் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.
ஆட்டத்தின் கடைசி பகுதியில் ஜெர்மனியின் ஹன்னா க்ரூகர் தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்ற முடிவில் அந்த அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.