சர்வதேச கிரிக்ெகட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியி்ட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரவரிசைப்பட்டியலி்்ல் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின், மயங்க் அகர்வால் அபாரமான முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இந்திய அணிக்கு எதிராக மும்பை டெஸ்டில் 14 விக்ெகட்டுகளை வீழ்த்திய நியூஸிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் அபாரமான முன்னேற்றம் அடைந்துள்ளார். 225 ரன்கள் கொடுத்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அஜாஸ் படேல், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளே, ஜிம் லேகர் இருக்கும் பட்டியலில் 3-வது வீரராகச் சேர்ந்தார்.
டெஸ்ட் தரவரிசையில் அஜாஸ் படேல் 23 இடங்கள் நகர்ந்து 38-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன் 58-வது இடத்தில் இருந்தார். இரு டெஸ்ட்களிலும் சேர்த்து அஜாஸ் படேல் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மும்பை டெஸ்ட் போட்டியி்ல் சதம் மற்றும் அரைசதம் அடித்து ஆட்டநாயகன்விருது வென்ற இந்திய வீரர் மயங்க் அகர்வால் 30 இடங்கள் முன்னேறி 11-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் அதிகபட்சமாக 10-வது இடம் வரை அகர்வால் முன்னேறினார் இப்போது 11-வது இடத்துக்கு வந்துள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இந்த டெஸ்ட் தொடரி்ல் 14 விக்கெட்டுகளையும், 70 ரன்களையும் சேர்த்தார். இதனால் பந்துவீச்சாளர்கள் வரிசையில் 883 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு அஸ்வின் நகர்ந்துள்ளார். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஹேசல்வுட் 816 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் அஸ்வின் 2-வது இடத்துக்கு 360 புள்ளிகளுடன் உயர்ந்துள்ளார். மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் ஜேஸன் ஹோல்டர் 380 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ரவிந்திர ஜடேஜா 346 புள்ளிகளுடன் 2-வது இடத்திலிருந்து 4-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். 348 புள்ளிகளுடன் பென் ஸ்டோக்ஸ் 3-வது இடத்தில் உள்ளார்.
மே.இ.தீவுகள் வீரர் ஜேசன் ஹோல்டர் இலங்கைக்கு எதிரான காலேயில் நடந்த டெஸ்ட் போட்டியி்ல் விக்ெகட் வீழ்த்தியதால் பந்துவீச்சாளர்கள் வரிசையில் 14-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.
இந்திய வீரர் ஷுப்மான் கில் 21 இடங்கள்நகர்ந்து 45-வது இடத்துக்கும், நியூலிலாந்து வீரர் டேரல் மிட்ஷெல் 26 இடங்கள்நகர்ந்து 78-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். முகமது சிராஜ் பந்துவீச்சாளர்கள் வரிசையில் 4 இடங்கள் நகர்ந்து 41-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.