விளையாட்டு

நியூஸி.க்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

செய்திப்பிரிவு

டி 20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நியூஸிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. கேப்டன் வில்லியம்சன் 39 பந்தில், 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 63 ரன் எடுத்தார்.

மார்ட்டின் கப்தில் 16, நிக்கோல்ஸ் 14, லூக் ரோன்ஜி 13, ராஸ் ஷான்டர் 10, நாதன் மெக்கலம் 2, கிராண்ட் எலியாட் 14, மெக்லினஹன் 1 ரன் எடுத்தனர். டெய்லர் 19, டிம் சவுதி 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட் கைப்பற்றினார்.

தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 19.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராய் 55, ஹேல்ஸ் 44, ஜோ ரூட் 12, மோர்கன் 20 ரன்கள் எடுத்தனர். பட்லர் 24, பென் ஸ்டோக்ஸ் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் நாதன் மெக்கலம் 2 விக்கெட் கைப்பற்றினார்.

சூப்பர் 10 சுற்றில் நியூஸி லாந்து தனது முதல் ஆட்டத்தில் 15ம் தேதி இந்தியாவையும், இங்கிலாந்து 16ம் தேதி மேற்கிந்தியத் தீவுகள் அணி யையும் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT