விளையாட்டு

2 ஆண்டுகள் கூடுதலாக விளையாடி விட்டேன் - பாண்டிங்

செய்திப்பிரிவு

சர்வதேச கிரிக்கெட்டில் 2 ஆண்டுகள் கூடுதலாக விளையாடி விட்டதாக ரிக்கி பாண்டிங் இப்போது தெரிவித்துள்ளார்.

ஸ்கை ஸ்போர்ட்ஸில் அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

"நான் 2 ஆண்டுகள் எனது கிரிக்கெட் வாழ்வை கூடுதலாக இழுத்தடித்தேன். எனது திறமை மேம்படப்போவதில்லை என்று நான் உணர்ந்துமே 2 ஆண்டுகள் கூடுதலாக ஆடிவிட்டேன்.

நான் எனக்காக விளையாடவில்லை. அணியில் இருந்த இளம் வீரர்களுக்காக நான் விளையாடினேன்.

நான் விளையாடிய அணியில் பல மூத்த வீர்ர்களையும் அறிவேன் இளம் வீரர்களையும் அறிவேன், அனைத்தையும் சில சுவாரசியமான குணச்சித்திரங்களையும் கண்டுள்ளேன்.

அந்த வீரர்களிடையே நானும் ஒருவனாக இருந்ததை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது." என்றார் ரிக்கி பாண்டிங்.

இவரது தலைமையின் கீழ் ஆஸ்ட்ரேலியா 2003 மற்றும் 2007 உலகக் கோப்பைகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT